அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்: இருளில் மூழ்கிய நகரங்கள்
அமெரிக்காவில் மிக சக்திவாய்ந்த பனிப்புயல் தாக்கியுள்ளது.
அதன்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நெவாடா ஆகிய நகரங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
அத்துடன், சுமார் 100 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்புயல் எச்சரிக்கை
இந்நிலையில், 49,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் பசிபிக் எரிவாயு மற்றும் மின்சாரம் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், பல இடங்களில் 10 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடப்பதாகவும் அதன் காரணமாக 160 கி.மீ. L-80 மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை சியரா நெவாடாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.