நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் (04.3.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் வடமேல், மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பொது மக்களுக்கு அறிவுறுத்தல்
இதனால் கடும் வெப்பநிலை நிலவும் பகல் நேரத்தில் வெளிப்புற நடவடிக்கைகளை வரையறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது
அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் உண்ணும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே போதுமான அளவு நீர் அருந்துவது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.