;
Athirady Tamil News

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தயார்

0

ஆரத்தழுவி ஒருநாளேனும் மனம் நெகிழ பேச மாட்டேனோ என வழிமேல் விழிவைத்து காத்திருந்த அன்னை இன்று விழிநீர் வழிதோறும் பரவி பெற்ற மகனை இடுகாடு அனுப்பும் சடங்கை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

சாந்தனின் பூதவுடல் இன்றைய தினம்(4) நல் அடக்கம் செய்வதற்கு முன்னர் அன்னாரின் வீட்டில் வைத்து இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற போதே இந்த மனதை உருக்கும் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

என்மகன் வருவான் அவனுக்கு என் கரத்தால் உணவூட்டுவேன் என தள்ளாடும் வயதிலும் காத்திருந்த அன்னையை உணர்விழக்கச் செய்யும் வண்ணம் காடு புகுவதற்கான பயணத்தில் வீடு வந்து சேர்ந்த நிகழ்வு நெஞ்சை கனக்க வைப்பனவாய் நிகழ்ந்து அடங்கியுள்ளது.

அன்புக்கரத்தால் அன்னமூட்டக் கொடுத்து வைக்காத பாவி நான் என உழன்றிய தாய் தன் திருக்கரத்தால் தன் அன்பு மகன் சாந்தனிற்கு திருநீறு நெற்றியிலிட்டு, ஈற்று வாய்ப்பாய் நீர் பருக்கி தீரா கண்ணீரால் ஆற்றி அமைதியுறா மனத்தினுடன் அன்னையவள் மகனை வழியனுப்ப தயாராகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.