;
Athirady Tamil News

சாந்தனிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி: காலம் கடந்து வெளியான தகவல்

0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பை தவறாக வழங்கியதற்காக சாந்தனிடம் மன்னிப்பு கோரினார் என சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”உயிரிழந்த சாந்தனின் வாழ்க்கை மிக துயரமானது என்று அவரின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் 120 சதுர அடி இடத்தில் அடைக்கப்பட்ட நிலையில் கடும் வேதனையில் நாட்களை சாந்தன் கழித்து வந்துள்ளார்.

சுயநினைவு இழப்பு
தாய் நாட்டுக்குச் சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் சாந்தன்.

அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவுக்காகக் கடவுச்சீட்டு பெறச் சென்ற போது சுயநினைவை இழந்தார்.

கடவுச்சீட்டு கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவைப் பெற்று பயணச்சீட்டை பெற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மாதம் 26ஆம் திகதி அவர் சுயநினைவு இழந்து காணப்பட்டார்.

நிறைவேறாத சாந்தனின் ஆசை
இந்நிலையில், அவரின் உடல் மோசமானமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயிரை காப்பாற்றி அவரை ஊருக்கு அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இதன் பின்னர், அவரை 28ஆம் திகதி இரவு இலங்கைக்கு அனுப்ப பணம் கட்டப்பட்ட நிலையில், 27ஆம் திகதி காலை உயிரிழந்தார்.

அவரின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் எவ்வளவோ போராடியும் அவர் தாயின் கையால் ஒரு வேளை உணவைக் கூட உண்ணாமல் இறந்துவிட்டார்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.