;
Athirady Tamil News

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றனர். இதன் போது இந்திய துணை தூதரகத்திற்கு செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூதரகம் முன்பாக பேரணியை செல்லவிடாது, பொலிஸார் இடைமறித்ததுடன் மீனவ அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர். இதற்கமைய தூதரகத்திற்குள் சென்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகார்ர்கள் இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.