;
Athirady Tamil News

ஜனாதிபதிக்காக கிளிநொச்சியில் இன்று குவிந்த தபால் அட்டைகள்!

0

வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி “நிலத்தை இழந்த மக்களின் குரல்” எனும் தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான நிறுவனம் தபால் அட்டைகள் அனுப்பு செலய்பாட்டினை முன்னெடுத்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்
இராணுவம், வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை, தொழிற்சாலைகள், தொல்பியல் திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி இவ்வாறு ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி ஜெயபுரம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை இழந்த பாதிக்கப்பட்ட 100க்கு மேற்பட்ட காணி உரிமையாளர்களால் தமது காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால யுத்தம் காரணமாக மக்கள் தமது காணி ஆவணங்களை பெற முடியாமலும், உறுதிக் காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்புக்கள், வயல் நிலங்கள் உள்ளிட்ட காணிகளை பெற்றுக்கொள்வதிலும், அபிவிருத்தி செய்வதிலும் மக்கள் நீண்ட ஆண்டுகளாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் தமது காணிகளைப் விடுவித்து, தமது எதிர்கால முன்னேற்றத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.