ரஷ்யாவிற்கு பேரிழப்பு : மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரைன்
உக்ரைன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த நிலையில், அதிபர் புடினின் புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்து உள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில்,
உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்கள்
ரஷ்யாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், உக்ரைனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் ரோந்து கப்பலை தாக்கியது.
⚡️Russian Sergei Kotov patrol ship of the Black Sea Fleet was destroyed last night by the Group 13 special Unit of Ukrainian Defense Intelligence.
As a result of the attack by Magura V5 naval drones, the Russian ship of project 22160 Sergei Kotov suffered damage to the stern,… pic.twitter.com/0yAG9vqg8Y
— Anton Gerashchenko (@Gerashchenko_en) March 5, 2024
இதில், ரூ.538 கோடி மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கின.
இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என தெரிவித்து உள்ளது.
இதேவேளை கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
13 ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் அழிப்பு
சர்வதேச மூலோபாய ஆய்வுகளின் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, மோதலின் தொடக்கத்திலிருந்து குறைந்தது 13 ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மற்றொரு ரஷ்ய கப்பலான சீசர் குனிகோவ், யால்டா நகருக்கு தெற்கே ஆளில்லா விமான தாக்குதலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.