;
Athirady Tamil News

50 நிமிடங்கள் நின்று போன இதயம் ; மருத்துவக் கணிப்பைத் தாண்டி உயிர்பெற்ற நபர்

0

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு 50 நிமிடங்கள் வரை நின்று போன இதயதுடிப்பு மீண்டும் மருத்துவக் கணிப்பைத் தாண்டியும் குறித்த நபர் உயிர்பெற்ற சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

குறித்த அதிசய நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாரடைப்பு
இங்கிலாந்தை சேர்ந்த பென் வில்சன் வீட்டில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு அவரது காதலி ரெபெக்கா ஹோம்ஸ் மீது சாய்ந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமைனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சுயநினைவின்றி இருந்த அவருக்கு மருத்துவர்கள் CPR வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் 50 நிமிடங்களுக்கு இடையில் இரண்டே முறை தான் இதயம் துடித்துள்ள நிலையில், அவருக்கு 17 முறை டீஃப்ரிலேட்டர் (defibrillator) மூலம் எலெக்ட்ரிக் கரன்ட் செலுத்தப்பட்டது.

அறுவை சிகிச்சை
பல முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவ குழு குடும்பத்தினரிடம் இழப்புக்குத் தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.

மருத்துவ ரீதியாக மாரடைப்பு ஏற்பட்டு இதயத்துடிப்பு நின்றுவிட்டதாகக் கூறப்பட்டாலும், கணிப்பைத் தாண்டி பென் வில்சன் அதிலிருந்து மீண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது மூளையை ஆக்ஸிஜன் பற்றாக்குறையிலிருந்து பாதுகாக்க ஐந்து வாரங்களுக்கு கோமாவில் வைத்துள்ளனர்.

மேலும் குறுகிய கால நினைவாற்றல் பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.