இளவரசி கேட் மிடில்டன் விவகாரத்தில் தலையிடும் ராணுவம்: இணைய பக்கத்தில் பெயர் நீக்கம்
பிரித்தானியாவில் ஜூன் மாதம் முன்னெடுக்கப்படவிருக்கும் Trooping of the Colour நிகழ்ச்சியில் இளவரசி கேட் மிடில்டன் பார்வையாளராக கலந்துகொள்வார் என்ற தகவலை ரணுவம் அதன் இணைய பக்கத்தில் இருந்து நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உரிய அனுமதி பெறாமல்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கேட் தொடர்பில் கென்சிங்டன் அரண்மனை இதுவரை தகவல் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி கேட் மிடில்டன் புகைப்படத்துடன் அனுமதி சீட்டு விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. ஆனால் அரண்மனை தரப்பில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ராணுவம் தங்கள் இணைய பக்கத்தில் இளவரசி கேட் மிடில்டன் பெயர் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளது.
பொதுவாக நிகழ்ச்சி தொடங்கும் சில நாட்களுக்கு முன்னர் தான் அரண்மனையில் இருந்து தகவல் உறுதி செய்யப்படும். மட்டுமின்றி, அறுவை சிகிச்சைக்கு பின்னர் இளவரசி தொடர்பான அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.