என்னை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் கோட்டாபய
சிறிலங்காவின் அதிபராக நான் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் சில வெளிநாட்டு மற்றும் உள்ளூர் கட்சிகள் செயற்பட்டதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் உள்ளடக்கி “பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை வெளியிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றையும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.
எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள்
அந்த அறிக்கையில், “இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று வெளிநாட்டுத் தலையீடும், உள் அரசியலின் சூழ்ச்சியும் இலங்கையின் வாழ்க்கையின் உண்மையாக மாறியுள்ளது.
தம்மை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்தது என்றும் சுதந்திரம் பெற்றதில் இருந்து தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே அனுபவித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை என்றும் கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.