ரொறன்ரோவில் வைத்தியர்களுக்கு இவ்வளவு தட்டுப்பாடா?
கனடாவின் ரொறன்ரோவில் ஐந்து லட்சம் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ குடும்ப வைத்தியர் கல்லூரியின் தலைவர் டொக்டர் மேகலா குமணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026ம் ஆண்டளவில் குடும்ப வைத்தியர்களின் சேவையை பெற்றக்கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக உயர்வடையலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குடும்ப வைத்திய சேவைகளை வழங்குவதில் பெரும் சவால் நிலைமைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அதிக எண்ணிக்கையிலான குடும்ப வைத்தியர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
நிர்வாக சிக்கல்கள் வேலைப்பளு போன்ற காரணிகளினால் குடும்ப வைத்தியர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க விரும்புவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் 2.3 மில்லியன் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப வைத்திய சேவையை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.