இலங்கை தொடர்பில் பிரித்தானியாவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை தொடர்பில் மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கி, பிரித்தானியாவின் பயண ஆலோசனையை மேம்படுத்துவதன் மூலம், இலங்கைக்கு உதவுமாறு, அந்நாட்டின் பழமைவாத கொன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர் பிரபு மைக்கேல் நேஸ்பி, பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம், இலங்கை தொடர்பாக தெரிவித்து வரும் தகவல்கள் தமக்கு கவலையை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுலாத் துறை
இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகின்றன. எனினும் கடந்த 18 மாதங்களாக இந்தப்பிரச்சினைகள் இல்லை.
இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக மீண்டு வரும் நிலையில் இலங்கை தொடர்பான பயண ஆலோசனைத் தகவல்களை வெளியுறவு மேம்பாட்டு அலுவலகம், மிகவும் துல்லியமாக வழங்கினால், அதிகமான பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள், அந்த நாட்டுக்கு செல்வார்கள்.
இதேவேளை இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது என மைக்கேல் நேஸ்பி தெரிவித்துள்ளார்.