நல்லூர் ஆலயம் முன்பாக விபத்து
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.
லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அருகில் இருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளானது.
கோவில் நிகழ்ச்சிகளை வழங்கும் தொலைக்காட்சி நிறுவனமொன்றின் அலுவலகமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.