உக்ரைனுக்கு அதிகரிக்கும் பலம்: உதவிக்கரம் நீட்டும் பிரபல நாடு
ஷ்யாவுடனான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பிரித்தானியா 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ்விற்கு நேற்றைய தினம்(07) பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த பயணத்தின் போது, கிராண்ட் ஷாப்ஸ் அறிவித்த £325 மில்லியன் (US$410 மில்லியன்) முதலீட்டு தொகுப்பின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ட்ரோன் ஆதரவு
அதேவேளை, பிரித்தானிய பிரதமரால் அறிவிக்கப்பட்ட £200 மில்லியன் ட்ரோன் ஆதரவு தொகுப்பை விட இந்த தொகுப்பில் கூடுதல் ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கண்காணிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் முதல் நபர் பார்வை ட்ரோன்கள் பெருமளவு வழங்கப்படவுள்ளது.
ட்ரோன் வகைகள்
அவற்றின் மூலம் எதிரி நிலைகள் மற்றும் நடமாட்டங்களை கண்காணித்து போர்க்களத்தில் உக்ரைனிய துருப்புக்கள் முக்கிய பலத்தை வழங்குகின்றன.
அத்தோடு, இங்கிலாந்தினால் வடிவமைக்கப்பட்ட 1,000 திசை தாக்குதல் ட்ரோன்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், உக்ரைனிய படைகளுக்கு குறிப்பாக நாட்டின் கடற்கரையை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு மற்றும் கடல் ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன.