இலங்கை குடும்பத்தின் படுகொலை பயங்கரமான வன்முறைச் செயல்: ட்ரூடோ கண்டனம்
கனடா – ஒட்டாவா பிராந்தியத்தில் இலங்கை குடும்பத்தினர் 6 பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இருந்து இடம்பெயர்ந்த இவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது பயங்கரமான வன்முறைச் செயல் என்று அவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விசாரணை பின்னணி
”ஒட்டாவா புறநகர்ப் பகுதியான பார்ஹேவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் கூறப்பட்டுள்ளது.
2023ல் ஒரு மில்லியன் மக்களை கொண்ட நகரமான ஒட்டாவாவில் 14 கொலைகள் நடந்துள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், 15 கொலைகள் நடந்துள்ளன.
இந்நிலையில் கனேடிய பொலிஸார் கொலை தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுப்பார்கள் எனவும், கொலைக்கு காரணமானவர்களை விரைவில் அடையாளம் கண்டு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் கனேடிய அரசாங்கம் சார்பில் உறுதியளிப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.