;
Athirady Tamil News

கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர்கள் : பின்னணி குறித்து வெளியான தகவல்

0

கனேடிய தலைநகர் ஓட்டாவில் இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த கொலைகள் திட்டமிட்ட வகையில் நடத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் கனடாவுக்கு சென்று குடும்பம் தங்கியிருந்த வீட்டின் நிலத்தடி தளத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் மாணவன் தங்கியிருந்துள்ளார்.

மாணவர் விசா
19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞன் மாணவர் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ள நிலையில், அவர் கல்லூரிக்கு செல்லும் காலப்பகுதிகள் மிகவும் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இரண்டு குடும்பங்களுக்கு ஏற்பட்ட பகையை தீர்க்கும் வகையில் இவ்வாறு திட்டமிட்டு அங்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனேடிய நேரப்படி நேற்று மதிய வேளையில் இடம்பெற்ற இந்த கோர சம்பவத்தில் நான்கு பிள்ளைகள் உட்பட தாய் உயிரிழந்துள்ளார். தந்தை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் புதன்கிழமை வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.