கனடாவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம்: தேரர் வெளியிட்ட பகீர் தகவல்
கனடாவில் ஒட்டோவா நகரில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் கொலை சம்பவம் தொடர்பில் கைதான பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரின் பிறந்த நாள் கொணடாட்டமானது, கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் பௌத்த பிக்குவான பந்தே சுனேத தேரர் கொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பான பல விடயங்கங்களை வெளியிட்டுள்ளார்.
பெரும் அதிர்ச்சி
அதன்போது, இந்த குடும்பம் மிகவும் கருணையானவர்கள் எனவும், மத வழிபாடுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் எனவும் இந்தக் குடும்பம் கொலையுண்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சில நாட்களுக்கு முன்னதாக சந்தேகநபரான பெர்பியன் டி சொய்சாவின் 19ஆம் பிறந்த நாளை இந்த குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும்
அதேவேளை, தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏகநாயக்கவின் கணவரான தனுஷ்கவின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் முகத்திலும் முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறுப்பட்ட கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த குடும்பத்தினர் கனடாவிற்கு வந்தனர் தேரர் தெரிவித்துள்ளார்.