;
Athirady Tamil News

ஹாலிவுட் Stunt அல்ல! கழன்று விழுந்த சக்கரம்: US போயிங் 777 விமானத்தில் அதிர்ச்சி!

0

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம், சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பான சம்பவத்தை சந்தித்தது.

கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம்
சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்கு செல்ல தயாராக இருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டது.

அதாவது விமானத்தின் சக்கரங்களில் ஒன்று புறப்படும் போது திடீரென்று கழன்று கீழே விமான நிலைய ஊழியர் நிறுத்துமிடத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் சென்று மோதியது.

இதில், கழன்று விழுந்த சக்கரம் தரைப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தியதோடு, ஊழியர் நிறுத்துமிட பகுதியில் இருந்த பல கார்களை சேதப்படுத்தியது.

இதையடுத்து விமானம் உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது விமானத்தில் சுமார் 249 பயணிகள் இருந்துள்ளனர். ஆனால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது, அதில் விமானத்தின் சக்கரம் லேண்டிங் கியரிலிருந்து பிரிந்து விழுவதை காண முடிகிறது.

விசாரணை ஆரம்பம்
இந்நிலையில், சக்கரம் கழன்று விழுந்ததற்கான காரணத்தை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (National Transportation Safety Board) விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், சமீபத்திய போயிங் தரக் கட்டுப்பாடு பிரச்சனைகளை தொடர்ந்து வருகிறது, ஜனவரியில் 737 Max விமானத்தின் கதவு நடுவானில் கழண்டு விழுந்த சம்பவமும் இதில் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.