கொத்தாக கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள்… ஆயுததாரிகள் அட்டூழியம்
நைஜீரியாவின் வடமேற்கு நகரமான குரிகாவில் 280க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்குள் ஆயுததாரிகள்
உள்ளூர் நேரப்படி பகல் 8.30 மணியளவில் பாடசாலைக்குள் புகுந்த ஆயுததாரிகள், மாணவர்களை சுற்றிவளைத்து கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 8 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுடன் ஆசிரியர் ஒருவரும் கடத்தப்பட்டுள்ளார். தொடர்புடைய சம்பவத்தை மாகாண ஆளுநர் Uba Sani உறுதி செய்துள்ளார். இடைநிலைப் பள்ளியில் இருந்து 187 மாணவர்களும், உள்ளூர் தொடக்கப் பள்ளியிலிருந்து 125 மாணவர்களும் காணாமல் போயுள்ளனர், ஆனால் 25 பேர் திரும்பி வந்துவிட்டனர் என ஆளுநர் Uba Sani தெரிவித்துள்ளார்.
மாணவிகள் கடத்தப்பட்டனர்
இதனிடையே, நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் கடத்தப்பட்டவர்களில் ஒரு குழந்தை இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த 2014ல் Chibok பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தப்பட்டனர்.
குறித்த கடத்தல் சம்பவத்தில் Ansaru என்ற அமைப்பே ஈடுபட்டுள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்ட கடத்தலிலும் அந்த அமைப்பினர் மீதே மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.