;
Athirady Tamil News

அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்க ராஜ குடும்பம் திட்டம்… இளவரசர் ஹரிக்கு இடமில்லை: நிபுணர் கூறும் காரணங்கள்

0

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது 80 வயதுகள் வரையாவது வாழ்வார், ஆட்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரைத் தாக்கியுள்ள புற்றுநோய், எதிர்பார்த்ததைவிட அதிக ஆபத்தானது என தெரியவந்துள்ளதால், அடுத்து அரியணையில் அமரப்போகிறவரை இப்போதே முடிவு செய்யும் ஒரு கட்டாய நிலை உருவாகியுள்ளது.

அடுத்து மன்னராகப் போகிறவர் யார்?
அடுத்து இளவரசர் வில்லியம்தான் மன்னராக வேண்டுமென மன்னர் சார்லஸ் விரும்புவதாக கருதப்படுகிறது. மரபுப்படியும், அரியணையேறும் வரிசையில் அடுத்ததாக இருப்பவர் அவர்தான்.

இளவரசர் ஹரி இருக்கக்கூடாது
ஆக, மன்னர் சார்லசுடைய உடல் நிலை மோசமாகும் முன், அடுத்து மன்னராகப்போவது யார், யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் என முடிவு செய்தாகவேண்டும்.

இந்நிலையில், அதற்கான திட்டமிடுதலில் இளவரசர் ஹரியை சேர்க்கக்கூடாது என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அதற்குக் காரணம், இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், 2020ஆண்டு மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களாக பணியாற்றும் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள். ஆகவே, பொறுப்பிலிருந்து விலகியவர்களை, அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான திட்டமிடுதலில் சேர்க்கக்கூடாதென இளவரசர் வில்லியம் கருதுகிறார்.

மேலும், அடுத்த மன்னர் அல்லது ராணியைத் தேர்ந்தெடுக்கும் விடயம், மிகவும் தனிப்பட்ட, ரகசியமான ஒரு விடயம். ஆனால், இளவரசர் ஹரியைப் பொருத்தவரை, அவருக்கு என்ன விடயம் தெரியவந்தாலும் உடனே ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க ஓடிவிடுவார். ஆகவே, இளவரசர் ஹரியை நம்ப யாரும் தயாராக இல்லை என்று கூறும் ராஜ குடும்ப எழுத்தாளரும் நிபுணருமான Tom Quinn என்பவர், ஆகவே, மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களாக பணியாற்றும் நபர்களில் ஒருவராக இல்லாததாலும், நம்பிக்கைக்குரியவராக இல்லாததாலும், ஹரி அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான திட்டமிடுதலில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.