புதருக்குள் மறைந்திருந்த பெண்கள்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
டெல்லி எல்லைக்கு அருகே உள்ள இந்திராபுரம் காஜியாபாத்தில் உத்தரபிரதேச போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வெளிநாட்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தனர்.
அதிகாலை நேரத்தில் கொள்ளையர்கள் அதிகமாக இருப்பதால், போலீசார் கண்காணித்து வந்த போது, இவர்கள் புதருக்குள் மறைந்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் இருவருமே மயங்கி விழுந்தனர். இவர்களை மீட்ட போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நீண்ட நேரமாக பதில் சொல்லாமல் இருந்த அவர்கள், தொடர்ந்து தங்களது பெயரை கூறினர். அதில் அவர்கள் கரோரி, ஆலிஸ் மஸ்ஸி என்று தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணையில் அவர்கள் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் பாஸ்போர்ட் இல்லை எனவும் தெரியவந்தது. மொபைலில் வைத்திருந்த பாஸ்போட்டும் 2023-ல் காலாவதியாகிவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரையும் மீட்டு கென்யா தூதரகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.