;
Athirady Tamil News

தலைநகரில் பரபரப்பு; தொழுகையில் ஈடுப்பட்டவர்களை எட்டி உதைத்த போலீசார்- சஸ்பெண்ட் உத்தரவு!

0

சாலையோரமாக தொழுகையில் ஈடுப்பட்ட இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் பரபரப்பு
டெல்லி, இண்டர்லாக் பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் தொழுவார்கள். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக தொழுகைக்கு ஏராளமானோர் கூடியதால் மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், வெளியே உள்ள சாலையில் தொழுகை நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை கலைக்க முற்பட்டார், ஆனால், அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர்.

போலீசார் சஸ்பெண்ட்
இதனால், ஆத்திரமடைந்த போலீசார், தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போலீசாரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் டெல்லி வடக்கு போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.