திருக்கேதீஸ்வரம் சென்றவர்களுக்கு இடைநடுவில் காத்திருந்த அதிர்ச்சி!
யாழ் – மன்னார் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.
குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (8) மாலை யாழ் மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி வெள்ளிக்கிழமை (08) மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.
இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேசமயம் தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரையானதாக கூறப்படுகின்றது..