ஜனாதிபதி ரணில் தொடர்பில் வெளியாகவுள்ள நூல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அறகலய’ பாரியளவிலான எதிர்ப்பிற்குப் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியானார் என்பது தொடர்பான நூல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அறிவித்துள்ளார்
இந்த நூல், கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட “பிரஸ் vs தி பிரெஸ்” மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்பவற்றின் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளது.
அரச தலைவர்
வெளியிடப்படவுள்ள குறித்த நூலானது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தனி ஆசனத்துடன் எப்படி இலங்கையின் அரச தலைவராக ஆனார் என்பது பற்றிய உள் கதையைச் சொல்கிறது.
இந்தநிலையில் ஏற்கனவே இந்த நூலை எழுதியுள்ளதாகவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.