;
Athirady Tamil News

வலி. வடக்கில் நாளை 67 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டவுள்ளது.

காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு J/234, J/235 கிராம சேவையாளர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும் , வறுத்தலைவிளான் J/241 கிராம சேவையாளர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் , மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) J/240 கிராம சேவையாளர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.

விடுவிக்கப்படவுள்ள காணி உரிமையாளர்களுக்கு, அப்பகுதி கிராம சேவையாளர்களால் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.