ஹிட்லர்,முசோலினி வரிசையில் நெதன்யாகு : துருக்கி அதிபர் கடும் சாடல்
துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முசோலினியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
“நெதன்யாகுவும் அவரது நிர்வாகமும், காசாவில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து, ஹிட்லர், முசோலினி மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்தபடியாக தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள்” என்று எர்டோகன் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இடம்பெற்ற உரையில் கூறினார்.
இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் எர்டோகன்
காசாவில் நடந்த போரின் தொடக்கத்தில் இருந்தே எர்டோகன் இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஹமாஸ் மற்றும் அதன் தலைவர்களை துருக்கி உறுதியாக ஆதரிக்கும்
எர்டோகன் முன்னர் இஸ்ரேலை “பயங்கரவாத நாடு” என்று அழைத்தார் மற்றும் காஸாவில் “இனப்படுகொலை” நடத்தியதாக குற்றம் சாட்டினார்.
முன்னதாக தனது உரையில், ஹமாஸை பயங்கரவாத குழுவாக அங்கீகரிக்க மறுத்த அவர், ஹமாஸ் மற்றும் அதன் தலைவர்களை துருக்கி உறுதியாக ஆதரிக்கும் என்றார்.