பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு
பாகிஸ்தான் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக பாக். மக்கள் கட்சி, பாக். முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சிகளின் ஆதரவு வேட்பாளராக ஜர்தாரியும், சன்னி இத்தேகாட் காவுன்சில் கட்சியின் வேட்பாளராக முகமது கான்(75) போட்டியிட்டனர்.
தேசியசபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் ஆசிப் அலி ஜர்தாரி 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேசமயம் அவரை எதிர்த்து களம்கண்ட முகமது கான் 119 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இதன்மூலம் ஆசிப் அலி ஜர்தாரி பாகிஸ்தானின் 14-வது அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே பாகிஸ்தானின் அதிபராக 2008 முதல் 2013 ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
ஆசிஃப் அலி ஜா்தாரி, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவர் மட்டுமின்றி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.