நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?
நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடூனாவில், ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 பள்ளி குழந்தைகளில் குறைந்தது 28 பேர் தப்பி ஓடி விட்டதாக அந்த மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகள் கடத்தல்
கடந்த வியாழக்கிழமை கடூனா மாநிலத்தின் Kuriga நகரில் நடந்த தாக்குதலில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் குழந்தைகள் இலக்கு வைக்கப்பட்டது.
கடத்தப்பட்ட குழந்தைகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை, 300 க்கு நெருக்கமான எண்ணிக்கையைக் குறிக்கும் அறிக்கைகள் உள்ளன.
இந்த சம்பவத்தின் போது சில குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தப்பியோடினர். அதில் தற்போது குறைந்தது 28 குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த 28 குழந்தைகள் தப்பி ஓடியது, கடத்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்புவதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு நம்பிக்கை
நைஜீரியாவின் கடூனா மாநில கவர்னர் உபா சானி, கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டுவதற்காக அதிகாரிகள் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேலைகளுக்கு நைஜீரிய ராணுவம் தலைமை தாங்கி வருகிறது.
நைஜீரியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.