;
Athirady Tamil News

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிதியுதவி! கனடா, ஸ்வீடன் எடுத்துள்ள முக்கிய முடிவு

0

ஸ்வீடன் மற்றும் கனடா பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவன நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளன.

நிறுத்தப்பட்ட நிதியுதவி
ஸ்வீடன்(Sweden) மற்றும் கனடா(Canada) ஆகிய நாடுகள், பாலஸ்தீன அகதிகளுக்கு(Palestinian refugees) ஆதரவளிக்கும் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலைகள் நிறுவனத்திற்கு (UNRWA) மீண்டும் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளன.

2024 ஜனவரி இறுதியில் இஸ்ரேல்(israel), ஹமாஸ்(Hamas) தாக்குதலில் UNRWA ஊழியர்கள் ஈடுபட்டதாகக் கூறிய பின்னர், 14 நாடுகளுடன் சேர்ந்து கனடா மற்றும் ஸ்வீடன் ஆகிய இந்த இரு நாடுகளும் நிதியுதவியை நிறுத்தி வைத்தன.

ஐக்கிய நாடுகள் தற்போது இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது, மேலும் பிரான்ஸ் சுயாதீன விசாரணையை நடத்தி வருகிறது.

மீண்டும் தொடங்கப்பட்ட நிதியுதவி
இந்நிலையில் செலவினங்கள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான உத்தரவாதங்களை UNRWA வழங்கிய பின்னர், ஸ்வீடன் இன்று 200 மில்லியன் kronor (அதாவது 19 மில்லியன் டாலர்கள்) ஆரம்ப நிதியுதவியை அறிவித்துள்ளது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஐரோப்பிய கமிஷன் €50 மில்லியன் (54.7 மில்லியன் டாலர்) நிதியை வெளியிடுவதற்கான முடிவைத் தொடர்ந்து ஸ்வீடன் நிதியுதவியை மீண்டும் தொடங்கியது.

இந்த முடிவுகளை தொடர்ந்து, காசாவில் உள்ள அவசர மனிதாநேய தேவைகளை காரணமாகக் காட்டி கனடாவும் நிதியுதவியை மீண்டும் தொடங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடரும் நிலையில், ஸ்வீடன் மற்றும் கனடாவின் முடிவுகள் மாற்றத்தைக் குறிக்கின்றன, மேலும் பாலஸ்தீன அகதிகளுக்கு ஆதரவளிப்பதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்கின்றன.

யார் இந்த UNRWA?
பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முதன்மை நிறுவனம் UNRWA ஆகும்.

காசாவில் மட்டும் சுமார் 13,000 பேரை இந்த நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. நிதியுதவி நிறுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் உதவி வழங்குவதில் சிக்கல் எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.