;
Athirady Tamil News

பாகிஸ்தான் மதநிந்தனை குற்றச்சாட்டில் 22 வயது மாணவனுக்கு மரண தண்டனை

0

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது 22 வயது மாணவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த மாணவர் வாட்ஸ்-ஆப் ஊடகத்தில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான படங்கள் மற்றும் விடியோக்களை அனுப்பியதாக வழக்கு நடைபெற்றுவந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டதன் மூலம் அவர் மதநிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தது.

அந்த தண்டனையை எதிர்த்து மாணவரின் தந்தை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தினால் அதற்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

எனினும், அந்தக் குற்றச்சாட்டில் பேரில் இதுவரை யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

எனினும், தனிப்பட்ட பகையைத் தீர்ப்பதற்கும், சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும் அந்த சட்டப்பிரிவு பபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மதவெறிக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.