;
Athirady Tamil News

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல்

0

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பத்தினர் 6 பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குடும்ப தலைவரான தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த மற்றொரு நபரான அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் தாக்குதலில் பலியாகியுள்ளார்.

சந்தேகநபர் கைது
சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தனுஷ்க விக்கிரமசிங்க தாக்குதலில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபரான டி ஸோய்சாவை தனுஷ்க குடும்பத்தினர் தங்களுடன் தங்க அனுமதித்திருந்த நிலையில், அவர் எதற்காக இரண்டு மாதக் குழந்தை உட்பட தனுஷ்க குடும்பத்தினரைக் கொடூரமாக கொலை செய்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல்
குடும்பம் முழுவதையும் இழந்த அதிர்ச்சியில் இருக்கும் தனுஷ்கவை மருத்துவமனையில் சந்தித்த போது கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தாலும், தன் குடும்பத்தையே கொன்ற டி ஸோய்சாவை, அந்தப் பிள்ளை சின்னப்பையன் தானே என்று இரக்கத்துடன் கூறியதாகவும் தனுஷ்கவின் நண்பரான Naradha Kodituwakku என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முழு குடும்பத்தையும் இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகனுக்கு ஆதரவாக இருப்பதற்காக தனுஷ்கவின் சகோதரரும், அவரது தந்தையும் விரைவில் கனடா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் ஆறு பேரின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என்றும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.