ஜாஎலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி சூடானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
நேற்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.