;
Athirady Tamil News

உலக அழகி 2024 மகுடம் சூடிய கிறிஸ்டினா பிஸ்கோவா

0

உலக அழகி போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகிப் பட்டம் வென்றுள்ளார்.

71 ஆவது உலக அழகி இறுதிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நேற்றுமுன் தினம் (9.3.2024) இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் 1996ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

உலக அழகிப் போட்டி
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் கரண் ஜோஹா், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இறுதிப் போட்டியின் 12 போ் அடங்கிய நடுவா் குழுவில் பிரபல நடிகைகள் கிருதி சேனன், பூஜா ஹெக்டே, முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், உலக அழகி அமைப்பின் தலைவா் ஜமீல் சயீதி உள்ளிட்டோா் இடம்பெற்றனர்.

இதில் 112 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனர். இறுதிப்போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்று இருந்தனர்.

சட்டம் மற்றும் வணிக நிர்வாகம்
இந்நிலையில், உலக அழகியாக செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தோ்வு செய்யப்பட்டார்.

அவருக்கு முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா உலக அழகி மகுடத்தைச் சூட்டினார்.

24 வயதாகும் கிறிஸ்டினா சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பை படித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.