உலக நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
உளச்சுகாதாரமான மக்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துக்கம் அல்லது துயர் மிகு மனோ நிலை குறைவாகக்கொண்ட மக்கள் சமூகத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை அங்கத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார நிலைமை
சிறந்த உளச் சுகாதாரத்தைக் கொண்ட நாடுகள் பிரிவில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிப்பதாகவும், முதல் இடத்தை டொமினிக்கன் குடியரசுகள் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, பிரேஸில் போன்ற நாடுகளின் மக்களது உளச் சுகாதார நிலைமையை விடவும் இலங்கை மக்களது உளச் சுகாதாரம் சிறந்த முறையில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளை விடவும் இலங்கை முன்னணி
குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சி குறைவான நாடுகளின் மக்களது உளச் சுகாதாரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் கலாச்சார விழுமியங்கள் மக்களின் உளச் சுகாதாரத்தை செலுமைப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.