ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி!
மேற்காசிய நாடான துருக்கியில் கடந்த 2014 இருந்து தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரிசெப் தாயிப் எர்டோகன் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம், தேர்தலில் வந்த முடிவுகளின் படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற 70 வயதுடைய இவர், துருக்கியின் 12ஆவது ஜனாதிபதியாக தனது 5வருட பதவிக்காலத்தில் தற்போது உள்ளார்.
இந்நிலையில், 2 தசாப்தங்களுக்கும் மேல் பதவியில் இருந்த நிலையில் மார்ச் தேர்தல்களை தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.