அல் கொய்தாவிற்கு பாரிய இழப்பு : யேமன் கிளையின் தளபதி பலி
அல்-கொய்தா அமைப்பின் யேமன் கிளையின் தலைவர் காலித் அல் பட்டாபி உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு மேலதிக எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
பல ஆண்டுகளாக அரேபிய தீபகற்பத்தில் அல்-கொய்தா குழுவை வழிநடத்திய காலித் அல்-பட்டாபியின் தலைக்கு அமெரிக்கா $5 மில்லியன் பரிசை நிர்ணயித்திருந்தது.
ஆபத்தான கிளையாக
சமீபத்திய ஆண்டுகளில் உள்நாட்டுப் போர் மற்றும் சந்தேகத்திற்குரிய அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதன் தலைவர்களைக் கொன்றதாகக் கருதப்பட்டாலும், நிறுவனர் ஒசாமா பின்லேடனின் கொலைக்குப் பிறகும் செயல்படும் குழுவின் மிகவும் ஆபத்தான கிளையாக நீண்ட காலமாக கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் புனித நோன்பு மாதமான ரமழான்
அல்-கொய்தா வெளியிட்ட காணொளியில் ,அல் பட்டாபி, இறுதிச் சடங்கில் ஒரு வெள்ளை நிற அங்கி போர்த்தப்பட்டிருப்பதையும், அல்-கொய்தாவின் கருப்பு மற்றும் வெள்ளைக் கொடியையும் காட்டுகிறது.
முஸ்லிம்களின் புனித நோன்பு மாதமான ரமழான் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த உயிரிழப்பை இந்த குழு அறிவித்தது.
இந்த அறிவிப்பில், குழுவின் தலைவராக சாத் பின் அதெஃப் அல்-அவ்லாகி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-அவ்லாகி “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்” என்று கூறி, அமெரிக்கா அவரின் தலைக்கு $6 மில்லியன் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.