குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு -அஸ்ஸாமில் முழு அடைப்பு போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் இன்று(மார்ச் 12) முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாலோ ரயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயுமென அம்மாநில காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, தலைநகர் குவஹாத்தியில் நேற்று (மார்ச் 11) அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, குடியுரிமை திருத்தச் சட்ட அறிவிக்கையை எரித்து மாணவர் அமைப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.