கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள்
காசாவில் இஸ்ரேலின் போர் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இடம்பெயர்ந்த ரபா முகாமில் மக்கள் ரமழான் தொழுகையில் ஈடுபட்டனர்.
கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதிக்கு பின்னர் காசா மீது முழு அளவிலான போரை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளது.இதில் பெண்கள்,குழந்தைகள்,சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என 30 ஆயிரத்தை கடந்து நீள்கிறது படுகொலை பட்டியல்.
ரபா மீதும் படையெடுப்பை மேற்கொள்ளப்போவதாக
ஆனால் இறுதியாக இலட்சக்கணக்கில் மக்கள் இடம்பெயந்து அடைக்கலம் தேடியுள்ள ரபா மீதும் படையெடுப்பை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
கடவுளே, தயவுசெய்து இந்த போரை நிறுத்துங்கள்
இந்த நிலையில் எப்போது தம்மீது குண்டு விழும் என்று தெரியாமலேயே வாழும் இந்த அப்பாவி மக்கள் நேற்றுமுன்தினம் (11) தொடங்கிய ரமழான் தினத்தில் “கடவுளே, தயவுசெய்து இந்த போரை நிறுத்துங்கள்” என தொழுகையில் ஈடுபட்டனர்.
அனைத்தையும் இழந்து இறை நம்பிக்கையை மட்டும் இழக்காத அவர்களின் இந்த தொழுகை படங்கள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.