கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்
கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 8500 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் பதவி வகிக்கத் தகமையுடைய தொழில்சார் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் சில மாகாணங்களில் தங்களது சேவையை வழங்க விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் பதவி வெற்றிடங்களை சமாளிக்கும் வகையில் பாடசாலை நிர்வாகங்கள் பூரண தகுதியற்றவர்களை ஆசிரியர் கடமையில் அமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டில் ஆசிரியர்களாக பணியாற்றிய மூன்று லட்சம் பேருக்கு ஆசிரியர் தொழில் தகமை கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியப் பணியில் ஈடுபடுவோருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாத காரணத்தினால் பலர் ஆசிரிய தொழிலை விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.