;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வாழைப்பழத்திற்கு தட்டுப்பாடு., உலகம் முழுவதும் விலை உயர வாய்ப்பு

0

உலகம் முழுவதும் வாழைப்பழம் விலை உயர்ந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இந்த பழங்களின் உற்பத்தியை பாதிக்கிறது.

சமீபத்தில், இந்தத் துறையின் வல்லுநர்கள் வாழைப்பழங்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலக வாழைப்பழ மன்றத்தின் மூத்த பொருளாதார நிபுணர் பாஸ்கல் லியு (Pascal Liu), பருவநிலை மாற்றம் வாழைப்பழங்களின் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, வாழைப்பயிரைப் பாதிக்கும் நோய்களும் வேகமாகப் பரவி வருகின்றன” என்று கூறினார்.

பிரித்தானியாவில் வாழைப்பழ தட்டுப்பாடு

சமீபகாலமாக கடல் சீற்றத்தால் பிரித்தானியாவில் வாழைப்பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஒவ்வொரு ஆண்டும் 5 பில்லியன் (500 கோடி) வாழைப்பழங்களை இறக்குமதி செய்கிறது. அவற்றில் 90 சதவீதம் பாரிய பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்கப்படுகின்றன.

தற்போது பிரித்தானியாவில் சில கடைகளில் வாழைப்பழம் இல்லை. கடந்த வாரம் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் வாழைப்பழங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
விநியோகச் சங்கிலியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வாழைப்பழத்தின் விலையை உயர்த்துகின்றன என Exeter பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டான் பெபர் (Dan Bebber) கூறுகிறார்.

உலக வாழைப்பழ மன்றத்தின் பொருளாதார நிபுணர் லியு கூறுகையில், பருவநிலை மாற்றம் வாழைத்தொழிலை பாதித்துள்ளது.

வெப்பமான வானிலை மற்றும் புயல்கள் விநியோகத்தை சீர்குலைத்து சிக்கல்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக வெப்பநிலை வாழைப்பழங்களின் உற்பத்தியை பாதிக்கிறது. சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாழைப்பழங்கள் இத்தகைய குறுகிய கால வானிலை நிலைகளைத் தாங்கும் என்றாலும், வெப்பமயமாதல் காலநிலையில் நோய்கள் வேகமாகப் பரவும் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

வாழைப்பழத் துறைக்கு பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக லியு கூறினார்.

பூஞ்சை நோய்
வெப்பமான காலநிலையால் நோய்கள் வேகமாகப் பரவுவது மிகப்பாரிய சவாலாகத் தெரிகிறது.

அவுஸ்திரேலியாவிலிருந்து, இந்த நோய் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை நோக்கி செல்கிறது.

வாழைத்தோட்டங்களில் ஒருமுறை பாதிக்கப்பட்டால், இந்த பூஞ்சை அனைத்து வாழை மரங்களையும் முற்றிலும் அழித்துவிடும். இந்த பூஞ்சையை அகற்றுவது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த பூஞ்சை வெள்ளம் மற்றும் பலத்த காற்று மூலம் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை நோய் வேகமாக பரவுகிறது. உரம், எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாலும், போதிய ஆட்கள் கிடைக்காததாலும் உற்பத்தியாளர்கள் வாழை சாகுபடியில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது, ​​வரும் நாட்களில் வாழைப்பழத்தின் விலை கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோமில் நடைபெறும் மாநாட்டில் வாழைப்பழ மன்றம் கூடும். இந்த மாநாட்டில் வாழைப்பழங்கள் குறித்து விரிவான அளவில் விவாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.