வடக்கு மாகாண பிரதம செயலாளாராக லட்சுமணன் இளங்கோவன் நியமனம்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக லட்சுமணன் இளங்கோவன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ ஏக்கநாயக்க வழங்கினார்.
எதிர்வரும் 15/03/2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளராக லட்சுமணன் இளங்கோவன் பொறுப்பேற்பார்.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவிகள் என பல்வேறு அரச உயர்பதவிகளில் கடமையாற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதியின் வடக்கு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராகப் பணியாற்றிய லட்சுமணன் இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.