மாலைதீவில் இருந்து வெளியேறிய இந்திய இராணுவத்தினர்
மாலைதீவுக்கு இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாலைதீவிலிருந்து இந்திய இராணுவத்தினரின் குழுவொன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலைதீவில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர், இந்தியா மாலைதீவுக்கு வழங்கியிருந்த ஹெலிகாப்டர்களை கையாளவே அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
உடனடியாக வெளியேற்றம்
இந்நிலையில், அவர்கள் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறதோடு, அங்கே அதிபராக முய்ஸு பதவியேற்ற பிறகு, அங்குள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.
இந்திய இராணுவ குழு
அத்தோடு, “சுமார் 25 இந்திய வீரர்கள், ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை இந்திய சிவில் குழுவினரிடம் ஒப்படைத்த பின்னர், அங்கிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்” என மாலைதீவு தேசியப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாலைதீவில் இன்னும் இரண்டு இந்திய இராணுவ குழுவினர் இருப்பதாகவும் அவர்கள் மே 10ஆம் திகதிக்குள் வெளியேறிவிடுவார்கள் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.