காசா கடற்கரையில் 1000 அமெரிக்க வீரர்கள்!! பின்னணியில் உள்ள சதிக்கோட்பாடு!!
பட்டினியால் தவிக்கும் காசா மக்களுக்கு உனவுப் பொருட்களை கடல் வழியாக வழங்குவதற்காகவென்று கூறி, காசாவில் ஒரு மிதக்கும் துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக இறங்கியுள்ளது.
மத்தியதரைக்கடலில் காசா கடற்கரையில் அந்தத் துறைமுகத்தை அமைக்கும் பணியில் 1000 இற்கும் அதிகமான அமெரிக்க படைவீரர்கள் ஈடுபட உள்ளார்கள்.
பிரித்தானிய இராணுவமும் அந்தத் துறைமுகப் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது காசாவின் கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்குலக இராணுவத்தினர் நிலைகொள்ளப்போகின்றார்கள் இன்னும் சில தினங்களில்.