மனித உயிருக்கு ஆபத்து :23 நாய் இனங்களுக்கு தடைவிதித்தது இந்தியா
மனித உயிருக்கு ஆபத்தானவை என கண்டறியப்பட்ட 23 நாய் இனங்களை வளர்ப்பதற்கும்,விற்பனை செய்வதற்கும் தடை விதித்து இந்திய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், றொட்வீலர் மற்றும் மாஸ்டிஃப்ஸ் ஆகியவையும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனிதர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் காரணமாக
செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் சில வகை நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்த பட்டியலில் உள்ள நாய்கள் செல்லப்பிராணிகளாக இருந்தால், அந்த நாய்களுக்கு மேலும் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட நாய் இனங்கள்;