கனடாவில் அறிமுகமான சிறுவர்களின் உயிர்களை காக்கும் தொழில்நுட்பம்!
னடாவில் உள்ள மொன்றியால் வைத்தியர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனேடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
குறித்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த தெரழில்நுட்பத்தை மருத்துவர்களுக்கு பயிற்றுவிப்பதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காக்க முடியும் என மருத்துவா ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக PeTIT VR என்ற இந்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக தொலை தூரத்தில் இருந்துகொண்டு விபத்துக்களினால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் தற்பொழுது பரீட்சார்த்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது