மருத்துவர்களுக்கு பரிசுகளை வழங்கக்கூடாது: இந்திய அரசு வெளியிட்ட விதிமுறைகள்
மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச பரிசுகளை வழங்கக்கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடைவிதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்தல் தொடர்பாக சில விதிமுறைகளை தேசிய மருத்துவ கவுன்சில் (National Medical Council) வெளியிட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டியவை
* மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் பரிசுகளை வழங்கக்கூடாது.
* மருத்துவரை அணுகும் போது அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் தரக்கூடாது.
* மருந்துகளைப் பரிந்துரைக்க இலவச மாதிரிகளை தகுதி இல்லாதவர்களுக்கு வழங்க கூடாது.
* தங்கும் விடுதி , ஓய்வு விடுதி, விலையுயர்ந்த உணவு ஆகியவற்றை வழங்கக்கூடாது.
* மாநாடு போன்றவற்றில் பங்கேற்பதற்காக வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயண வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடாது .