வறட்சியின் உச்சத்தில் நந்திக்கடல்: மக்கள் விசனம்
முல்லைத்தீவில் அமைந்துள்ள நந்திக்கடலானது தற்போது வரண்டு போவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நிலவும் கடும் வெப்பமான காலநிலையினால் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எதிராக உள்ள நந்தியுடையார் வெளியை அண்டிய நந்திக்கடலின் நீரேந்துபகுதியில் நீர் வற்றி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வெப்பமான காலநிலை
இதன் காரணமாக கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமத்துக்குள்ளாவதாக கூறியுள்ளனர்.
கடும் வறட்சி காரணமாக நிலம் காய்ந்து நீரற்று போகின்றமையினால் அந்த நிலத்தில் வளரக்கூடிய கால்நடைகளுக்கு உகந்த புற்கள் வளரும் சூழலை இழந்துள்ளதாக கால்நடை வளர்ப்போர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வழமைக்கு மாறான வெப்பமான காலநிலையினால் இம்முறை கோடை அமையப் போகிறது என கால்நடை வளர்ப்போர் குறிப்பிட்டுள்ளனர்.
நந்திக்கடல், மஞ்சள் பாலத்தில் நீரினளவு குறைந்து செல்வதோடு நீரற்ற நிலம் வறண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.