;
Athirady Tamil News

தோனியை சந்திக்க போகும் யாழ்ப்பாண மாணவன்

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய கிரிக்கெட் வீரர் ஒருவரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேந்திரசிங் தோனியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சென் ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த குகதாஸ் மத்துலன் என்ற 17 வயதான மாணவனையே தோனி சந்திக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த சில நாட்களில், அவர் சேப்பாக்கத்தில் பந்துவீசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

17 வயதுடைய குறித்த மாணவன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை போல பந்துவீசக்கூடியவர்.

சிறந்த முறையில் யோகர் பந்துகளை மிகவேகமாக வீசக்கூடியவராக இவர் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.