வெடுக்குநாரி மலையும் குழப்பங்களும் -நடந்தது என்ன? தீர்வு உங்கள் கையில்!
அண்மை காலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இருப்பது வவுனியா வெடுக்குநாரி மலை தொடர்பான சர்ச்சையே அதிகமாக பேசுபொருளாக உள்ளது
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அதிகமா அரச எதிர்ப்பு பிரச்சாரமும் தமிழ் தேசிய கட்சிகள் மீதான வெறுப்பு விருப்பு வசனங்களும் என பொக்கை வாய் கிழவி வெற்றிலை போட்ட கதையாக மாறியுள்ளது குறித்த விடயம்
உண்மையில் நடந்தது என்ன..? நடப்பது தான் என்ன…? இது பலருக்கு விடை தெரியா விடயமாக உள்ளது இதே நிலையில் தான் நானும் இருந்தேன் அந்தப்பக்கமா..? இந்தப்பக்கமா..? என சற்று குழம்பிய நிலையில் எவ்வாறெனினும் தமிழனாக இருக்கவேண்டும் என்ற மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்து வந்தேன்
ஆனாலும் பலரின் கேள்விக்கனைகள் என்னை சிந்திக்க வைத்தது அந்தவகையில் ஒரு ஊடகவியலாளனாக மக்களுக்கு தெளிவூட்டும் (இரு சாராருக்கும்) பொருப்பு என்னிடம் இருப்பதாக நான் உணர்ந்து, நானறிந்த சட்டவல்லுனர்கள் சட்டத்தரனிகள் மற்றும் காவல்துரையின் சில உயரதிகாரிகளிடம் கேட்டறிந்து தெளிந்த விடயத்தை மக்களும் அறிந்து கொள்ளட்டும் என நினைத்து இந்த ஆக்கத்தை எழுதுகிறேன் இறுதியி்ல் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்களே உங்கள் பாணியில் புரிந்து கொள்ளுங்கள்… சரி விடயத்திற்கு வருவோம்
வெடுக்குநாறிமலை இது இன்னமும் தொல்லியல் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதி என அரசாங்கத்தால் வர்த்தமாணி அறிவித்தல் வழங்கபடவில்லை எனினும் இந்த பகுதியில் தொல்லியலுக்கான அடையாளங்கள் காணப்படுகிறது என வர்தமாணி அறிவித்தல் உள்ளது இதுவே முதலாவது விடயம்
ஏற்கனவே குறித்த பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைகளால் நீதிமன்றில் வழக்கு நிலைவையில் இன்றுவரை உள்ளது என்பதை இந்த இடத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் இந்நிலையில் கடந்த சிவராத்திரி தினம் அன்று விசேட பூஜை வழிபாடுகளை செய்வதற்கு என ஆலய பூசகரால் குறித்த வழக்கிற்கு “மோசன்” போடப்பட்டு நீதிபதியால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்த விசாரனையை மேற்கொண்ட நீதிபதி 2023 வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக செயல்படுமாறு ஆலய நிர்வகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு 14ம் திகதி வரை மணுவை தள்ளுபடி செய்திருந்தார்
இப்போது தான் இதில் பலருக்கு சந்தேகம் எழுகிறது 2023 ல் வழங்கப்பட்ட நீதிமன்ற அறிவுறுத்தல் என்ன என்று .? உண்மையில் அப்போது வழங்கப்பட்ட விடயமானது ஆலயமானது அனைத்து பிரிவினருக்கும் உரித்தானது இங்கு மக்கள் வழிபட தடையில்லை எனினும் விக்கிரகங்கள் தொல்பொருட்கள் சேதமாக்குதல் என்பனவற்றுக்கு தடையென்றும் இரு சமூகத்தினருக்கும் இடையில் நேரடியாக குழப்பம் ஏற்படுமாயின் பொலிஸார் கைதை மேற்கொள்ள வேண்டும் எனவும் விசேட பூஜை வழிபாடு உற்சவங்கள் செய்ய முடியாது என்றும் குறித்த நீதிமன்ற அறிவுறுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இது இவ்வாரிருக்க ஜனநாயக குடியரசான இலங்கை நாட்டின் சட்டத்திணை உற்றுநோக்கோவோமானால் வனப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பகுதி மற்றும் தொல்லியல் சம்பந்தமான பகுதிகளுக்குள்ளும் மக்கள் உள்நுழைவதே முற்றிலும் தடை என்பது நாங்கள் சற்று சிந்திக்க வேண்டும் அதுவே சட்டமும் கூட எனவே பொலிஸார் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்வதற்கான அதிகாரம் அவர்களிடம் சட்டரீதியாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
எனவே வனப்பகுதியில் உள்நுழைந்தமைக்கு எதிரான சட்டம் மற்றும் அங்கு பொங்கல் வழிபாடு செய்யும் போது மேற்கொள்ளப்படும் தீயினால் தொல்பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் என வழக்கு தாக்கல் செய்து இன்று என்மர் கைதாகியுள்ளனர் இது தான் நடந்தது
ஆக இதில் பலருக்கு இருக்கும் சந்தேகங்கள் என்னவென்றால் சைக்கிள் கட்சிகாரரின் பிரவேசமும் வேலன் சுவாமிகளின் உள்நுழைவுமே ….!
வேலன் சுவாமிகளை பொருத்தவரையில் அவர் உத்தியோக பூர்வற்ற சைக்கிள் கட்சிகாரர்களின் ஓர் முகவராகவே செயல்படுகிறார் என்பது சகலரும் அறிந்த விடயமே இவரும் நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் சரி இருவரும் ஊடகவிரும்பிகள் என்பது பலரின் கருத்தாக உள்ளது இதேவேளை இங்கு கைது செய்யப்பட்டவர்களிலும் ஓரிருவர் இதே கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
கஜேந்திரன் அவர்கள் இங்கு மட்டும் அல்ல பல இடங்கிளில் 2001 ஜூன் 30ம் திகதி எப்படி தமிழக கருணாநிதி கைதாகும் போது அவருடைய அலரலும் நடிப்பும் இருந்ததோ அது போலவே இங்கு கஜேந்திரன் அவர்களை பலமுறை கைது செய்யும் போதும் இடம்பெறுவது வழமை, சந்தேகம் என்றால் google ல் சென்று இருவரின் புகைப்படங்களையும் நீங்களே ஒப்பிட்டு பார்க்க முடியும் மேலும் பல பகுதிகளில் இவர்கள் சென்று குரல் கொடுப்பதும் இவர்களை சுற்றியுள்ளவர்கள் கைதாவதும் இது தமிழர்கள் மத்தியில் வழமையானதாக மாறிவிட்டது எனினும் பிரிதொரு சிலர் அவர் என்றாலும் குரல் கொடுக்கிறாரே ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயை மூடி அரசுக்கு முட்டு குடுக்கிறார்களே என்ற சிந்தனையும் உள்ளது
எனவே தான் வெடுக்குநாறி தொடர்பாக பலரும் பலதுபோல விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என்பதுவே உண்மை இதில் மற்றுமொரு பக்கத்தை பார்ப்போமேயானால் கஜேந்திரன் ஒரு நடாளுமன்ற உறுப்பினர் சுகாஸ் ஓர் சட்டத்தரணி இவர்களுக்கு தெரியாதா இவர்கள் செய்வதால் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் கைதாவார்கள் என்று எனவும் கேள்விகளை எழுப்புகின்றனர்
ஆனால் இது தொடர்பாக களத்தில் அன்றைய தினம் நின்ற செய்திசேகரித்த சக ஊடகவியலாளர்களின் கருத்துப்படி அன்று சில பெளத்த பிக்குகள் வருகை தரவிருந்தனர் என்றும் மாலை அறு மணிக்கு பின்னர் அவர்கள் உள்நுழைய உள்ளதாக ஆலய நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் (இதில் உண்மை தன்மை உறுதிப்படுத்தவில்லை) அடிப்படையில் வேறு குழப்பங்கள் இடம்பெற்றுவிட கூடாது என்பதுக்காக மாலை நேரமே செல்ல முற்பட்ட கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் அதுபோலவே மாலை 6மணிக்கு பொலிஸார் குழப்பத்தை உண்டு செய்ததாவும் கூறுகின்றனர்
இதேவேளை பகல்வேளையிலேயே மலைப்பகுதிக்கு வரும் குடிநீர் விநியோகங்களை தடுத்து நிறுத்தியதாகவும் அங்கு நின்ற கண்ணூடாக பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர் அதன்போதும் பல்கலை மாணவர்களும் கஜேந்திரன் அவர்களுமே தலையிட்டு குடிநீர் விநியோகத்தை தொடர்ந்து மேற்கொள்ள செய்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது
எது எவ்வாறு இருப்பினும் பொலிஸாருக்கு கைது செய்வதற்கான அதிகாரங்கள் இருப்பினும் ஒரு மதவழிபாட்டில் அவர்கள் நடந்துகொண்ட விதம் மற்றும் மக்களை கைது செய்த விதமும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஓர் விடயமாகும் பொங்கல் பொங்கும் போது தீயின் வெப்பத்தில் நிலத்தின் கீழ் மற்றும் அருகில் உள்ள தொல்லியல் பொருட்களுக்கு சேதம் ஏற்படும் என்ற ரீதியிலேயே இதனை பொலிஸார் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றனர் இங்கேதான் பலருக்கும் ஒரு நாடு இரு சட்டம் என்ற கேள்வி எழுகின்றது குறித்த தினத்திலேயே கியுல கடவெல என்ற பகுதி வனப்பகுதியில் இதே தொல்லியலுக்கு உரித்தான பகுதியில் இந்து பெளத்த அமைப்பினர் பொங்கல் செய்து பூஜை வழிபாட்டை செய்துள்ளனர் ஆக அவர்களை ஏன் அந்த பொலிஸார் கைது செய்யவில்லை..? அவ்வளவு தேவையில்லை இதே எமது முல்லைத்தீவு மண்ணில் தொல்லியல் பொருட்கள் காணப்படும் இடமாக கருதப்பட்டு வர்த்தமாணியில் உள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறியும் விகாரை அமைக்கப்பட்டதே அதன்போது ஏன் பொலிஸார் கைதுகளை மேற்கொள்ள இல்லை..? எனவே இந்த விடயத்தில் பொலிஸாரின் அராஜகம் மற்றும் இரட்டைவேடமும் பலருக்கு சந்தேகங்களை வலுப்படுத்துகிறது இதப்பின்னனி தான் என்ன…???
“ஆக ஒரு நாடு இரு சட்டமா……?”