பிரிட்டன்: ‘மே 2-இல் தோ்தல் இல்லை’
பிரிட்டனில் வரும் மே 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுடன் பொதுத் தோ்தலும் நடத்தப்படலாம் என்ற தகவலை பிரதமா் ரிஷி சுனக் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
இது குறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில்,
‘இன்னும் சில வாரங்களில் காவல் துறை, குற்றவியல் துறை ஆணையா்களையும், உள்ளூா் கவுன்சிலா்களையும் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மட்டுமே நடைபெறும். அந்தத் தேதியில் பொதுத் தோ்தல் நிச்சயம் நடத்தப்படாது’ என்றாா்.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக்கின் கன்சா்வேட்டிவ் கட்சி, அண்மைக் காலமாக நடைபெற்ற இடைத் தோ்தல்களில் தோல்வியைச் சந்தித்தது. கருத்துக் கணிப்புகளிலும் அந்தக் கட்சிக்கு வாக்காளா்களிடையே ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில், முன்கூட்டியே தோ்தல் நடத்தப்படவேண்டும் என்று எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வலியுறுத்திவருகிறது.